விளையாட்டு

குமார் சங்கக்காரவுக்கும் அழைப்பு

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், வாக்குமூலமளிக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள, விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவுக்கு நாளை(02) காலை 09 மணிக்கு வருமாரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைக் குழுவில் விளையாட்டுவீரர் உபுல்தரங்க, இன்று (01) வாக்குமூலமளித்திருந்தார்.

முன்னதாக,இலங்கை அணியின் தெரிவிக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, குறித்த விசாரணைக் குழுவில் நேற்றைய தினம் முன்னிலையாகி சுமார் ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

Related posts

மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!

user2

LPL போட்டிகள் ஒத்திவைப்பு

user2

ஹைதரபாத்தை வென்ற சென்னை

user3

Leave a Comment