இலங்கை

அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ள அனுமதி

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும் வழமைபோன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதமொன்று வௌியிடப்பட்டுள்ளதாக கல்விமையச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரை மாத்திரம் பாடசாலைகள் நடத்தப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரரா தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில பாடசாலைகளில் தற்போது மாலை 3.30 வரை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 169 கொவிட்-19 தொற்றுக்கள் இனங்காணப்பட்டன’

user2

மறு அறிவித்தல் வரை மக்களுக்கு அனுமதியில்லை

user2

வாக்களிக்க வந்தவர் மரணம்

user2

Leave a Comment