உலகம்

ஜப்பான் பிரதமர் இராஜினாமா

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ஷின்சோ அபே  குடல் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் தற்போது ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

farookshareek

இளவரசர் வில்லியமிற்கு கொவிட்

user2

கனேடிய நிதியமைச்சர் இராஜினாமா

farookshareek

Leave a Comment