வணிகம்

செலான் வங்கி தங்கக்கடன் சேவை விரிவாக்கம்

செலான் வங்கி, தங்கக் கடனுக்கான மாதாந்த வட்டி வீதத்தை 0.79 சதவீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. COVID-19 காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைத் தணிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, செலான், தற்போது 24 கரட் தங்கத்துக்கு அதிகப்பட்ச முற்பணமாக, ரூ. 66,000, 3 மாதங்களுக்கு திருப்பிச் செலுத்தும் திட்டங்களுடன் வழங்குகிறது. அத்துடன், 1 வருட தங்கக்கடன் சேவையையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப முன்னெடுத்து செல்லப்படுகிறது. 

குறைந்தப்பட்ச ஆவணங்களுடன், உடனடியாக நிதி உதவியைப் பெறுவதற்காக, சந்தையில் உள்ள நுகர்வோர் தேவையை, செலான் குழு புரிந்துகொண்டது. எனவே, தங்கக்கடன் வசதியை வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அல்லது வணிக நோக்கங்களுக்கான அவசர நிதித் தேவைகளுக்காக விரிவாக்கி வழங்கி வருகிறது. செலான் வங்கி, ஏற்கெனவே தனது கிளை வலையமைப்பின் பெரும்பகுதியை, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயற்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு, தங்கக்கடன் சேவைகளை அறிமுகப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுவதற்கு, தேவையான பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

COVID-19 தொற்று நோய் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் நிதிச் சவால்களை ஆராய்ந்து, அவர்களது நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை, பொது நோக்காக ஆராய்ந்த செலான் குழு, தனது வாடிக்கையாளர் தளத்தை வலுப்படுத்த, தங்கக்கடன் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தங்கள் தங்கச் சொத்துக்களை, தமது வணிகங்களைப் புதுப்பிக்கத் தேவையான மூலதன கடன்களைப் பெற பயன்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள்,  வங்கி வழங்கும் அதிக முன்பணத் தொகை ஆகியவை நுகர்வோருக்கு அவசர மருத்துவ செலவுகள், கல்விச் செலவுகள், அவசர வீட்டுத் தேவைகளுக்குத் தேவையான பணம் போன்ற அவசர பணத் தேவைகளுக்கு நிதியளிக்க உதவும். 

மேற்கூறியதற்கு மேலாக, உற்பத்தித் துறையிலுள்ள சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் இல்லாது, இயந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கும், விவசாயிகள், விவசாயத் துறையில் உள்ளோர் உரங்கள், பூச்சிக்கொல்லிகளை கொள்வனவு செய்யவும், இளம் தொழில் முனைவோரின் சிறு வணிக திட்டங்களுக்கும், உயர் கல்வியை நாடும் இளம் நிர்வாகிகளும் செலான் தங்கக்கடன் வசதியை பெற்றுக்கொள்ளலாம். வங்கி மூலம் தங்கக் கடன்களைப் பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு, தனியுரிமையை செலான் உறுதிப்படுத்துகிறது. இந்தச் சேவையை வழங்க, தற்போது இயக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிளைக்கும் செயற்பாட்டின் போது, பொருள்கள் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தி, தங்கத்தின் எடையை அடர்த்தி மீட்டர்கள் கொண்டு பரிசோதனை செய்ய, மிக உயர்ந்த தரமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ள ஒரு தனிப் பிரிவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்

farookshareek

செலான் வங்கியின் முதலாவது ‘ஒன்லைன்’ வருடாந்த பொதுக் கூட்டம்

user2

mCash க்கு மூன்று உயர் விருதுகள்

user2

Leave a Comment