வணிகம்

டயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையில்; அதிக நன்மைகளை கொண்ட couple plan ஆன ‘Couple Blaster’ மொபைல் Plan இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய Plan இனை அனைத்து டயலொக் மொபைல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் மாதாந்தம் ரூ.123 க்கு (வரிகள் உள்ளடங்களாக) பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருவர் இந்த Plan இனை செயற்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்கள் இருவருக்கும் வரையறையற்ற D2D அழைப்புகள் மற்றும் SMS களை பெற்றுக்கொள்ள முடியும்.

மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த Plan இனை ரூ.123 ஐ ரீலோட் செய்வதன் மூலமும் மொபைல் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் #171# டயல் செய்வதன் மூலமும் செயற்படுத்திக்கொள்ள கூடியதுடன், #171# ஊடாகவே அவருடைய மொபைல் இலக்கத்தை பதிவு செய்துக் கொள்ள முடியும். பதிவு செய்யும் மற்ற இலக்கம் டயலொக் மொபைல் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பாக இருக்கலாம்.

மொபைல் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த இலக்கத்தை மாதத்திற்கு ஒரு முறை எவ்விதமாக கட்டணங்களும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும். மொபைல் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் பதிவு செய்த இலக்கத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் மாற்றும் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணமாக அறவிடப்படும்.

வரையறையற்ற சலுகைகளை வழங்கும் Blaster பக்கேஜ்களில் புதிதாக இணைந்த அங்கத்தவர் –  Couple Blaster பக்கேஜ். எமது நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் தேவைகளை அறிந்து அதற்கு பொருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் குடும்பத்தில் நீங்கள் அதிகளவாக அழைப்பினை மேற்கொள்ளும் இலக்கத்திற்கு வரையறையின்றி கதைக்கவும் இந்த பக்கேஜினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

15 மில்லியனுக்கும் அதிக வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் நம்பிக்கையான இணைப்பினை வழங்கும் முகமாக டயலொக் கொண்டு வரும் திருப்புமுனையாக இந்த புதிய Couple Blaster பக்கேஜ் அறிமுகமாகியுள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டன

farookshareek

அமானா வங்கியின் ஃபிச் தரப்படுத்தல் BB+ (lka) ஆக உயர்வு

user2

கடனட்டைகளுக்கான வட்டி 18 வீதமாக குறைப்பு

farookshareek

Leave a Comment