விளையாட்டு

பெல்ஜியத்தை வென்றது இங்கிலாந்து

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், இங்கிலாந்தில் நேற்றிரவு நடைபெற்ற பெல்ஜியத்துடனான குழு பி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தார். இதேவேளை, பிரான்ஸில் இன்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் போர்த்துக்கல், பிரான்ஸுக்கிடையேயான குழு சி போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில், போலந்தில் நடைபெற்ற போலந்து, இத்தாலிக்கிடையேயான குழு ஏ போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இதேவேளை, பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவில் நேற்றிரவு நடைபெற்ற நெதர்லாந்து, பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவுக்கிடையிலான குழு ஏ போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில், குரோஷியாவில் நடைபெற்ற குரோஷியா, சுவீடனுக்கிடையிலான குழு சி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது. குரோஷியா சார்பாக, நிகொலா விளாசிச், அன்ட்ரேஜ் கிரமரிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சுவீடன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் பேர்க் பெற்றிருந்தார்.

Related posts

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி

user2

ஹைதரபாத்தை வென்ற சென்னை

user3

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

farookshareek

Leave a Comment