இந்தியா

கொரோனா பாதிப்பு 29,164 ஆக குறைந்தது!

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 29,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 449 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 40,000 க்கு கீழ் குறைந்த நிலையில், இப்போது 30,000 என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: மேலும், 29,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 8,874,291 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 40,791 பேர் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து கொரோனாவில் இருந்து 8,290,371 போ் மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.27 சதவீதமாகும்.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 449 போ் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 130,519 ஆக அதிகரித்துவிட்டது. மொத்த பாதிப்பில் இது 1.47 சதவீதமாகும்.

நாட்டில் கொரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 453,401 ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் இது 5.26 சதவீதமாகும். இதன் மூலம் தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 7 ஆவது நாளாக 5 இலட்சத்துக்குக்கீழ் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 126,542,907 கொரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நவம்பா் 16 ஆம் திகதி மட்டும் 844,382 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

வடகிழக்கு பருவமழை – மஞ்சள் எச்சரிக்கை!

user2

அமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா

user2

அரச மரியாதையுடன் விடைபெற்றார் எஸ்.பி.பி

user2

Leave a Comment