புதுச்சேரி-மரக்காணம் இடையே கரை கடந்த அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரை நடக்கும் நிகழ்வு நீடித்தது. புயல் கரை கடந்தபோது புதுச்சேரி உட்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.