உலகம்

6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,426,843 கடந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 280 பேரும், மெக்சிகோவில் 813 பேரும், இத்தாலியில் 722 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 60,721,235 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 17,261,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 104,519 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 42,032,421 அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1,426,843 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 268,221
பிரேசில் – 170,799
இந்தியா – 135,261
மெக்சிகோ – 103,597
இங்கிலாந்து – 56,533
இத்தாலி – 52,028
ஈரான் -46,207
ஸ்பெயின் – 44,037

Related posts

உலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி – பலி 13.77 இலட்சம்

user2

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

farookshareek

கொரோனா தொடர்பில் WHO விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு!

user2

Leave a Comment