உலகம்

உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 61,308,161 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,437,835 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 42,396,169 போ் பூரண குணமடைந்துள்ளனா்.

சுமாா் 17,474,157 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 105,010 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கொரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 13,248,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 269,555 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 7,846,872 பேர் குணமடைந்துள்ளனர், 5,132,249 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 24,396 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts

20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

farookshareek

வடகொரியாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

user2

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

farookshareek

Leave a Comment