விளையாட்டு

LPL – சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

இதில் சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்ளை பெற்றுக் கொண்ட காரணத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.

கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக தினேஸ் சந்திமால் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Related posts

பெடரரின் சாதனையை சமப்படுத்திய நடால்

user3

ஷக்தார் டொனெஸ்டெக்கிடம் தோற்றது றியல் மட்ரிட்

user3

2 சுப்பர் ஓவர்களையடுத்து மும்பையை வென்ற பஞ்சாப்

user3

Leave a Comment