உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105,248 பேர் கவலைக்கிடம்

உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 61,988,054 ஆகக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,449,114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரத்து 054 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 61,988,054 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,449,114 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 42,787,565 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 17,751,375 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 105,248 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கொரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 13,454,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 271,026 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 7,945,582 பேர் குணமடைந்துள்ளனர், 5,237,646 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 24,464 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts

டிரம்ப்பின் முறைப்பாடு நிராகரிப்பு

user2

கொரோனா தொடர்பில் WHO விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு!

user2

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

user2

Leave a Comment