இலங்கை

புறக்கோட்டையில் சில பகுதிகள் திறக்கப்படாது

புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் திறக்கபட்டாலும் சில பகுதிகளுக்கான முடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்கள் நாளை காலை திறக்கப்படாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு தெருக்களில் பணியாற்றுபவர்களுள் அதிகமானோர் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள, கொழும்பு வடக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பு வடக்கில் தொடர்ந்தும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

562 பேர் குணமடைந்தனர்

user2

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

user2

இரண்டு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

user2

Leave a Comment