இலங்கை

4 கைதிகளின் முயற்சி தோல்வி

கண்டி- போகம்பறை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் நால்வர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் தனிமைபடுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த கைதிகள், தங்கவைக்கப்பட்ட அறையின் கதவை உடைத்துக்கொண்டு வெளியேறுவதைக் கண்ட, சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, தப்பிச் சென்றவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை போகம்பறை சிறையில் 310 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் 3 கைதிகள் தப்பிச் செல்ல முயன்ற போது, ஒருவர் மதிலிலிருந்து விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

user2

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

user2

மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்தனர்

user2

Leave a Comment