யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றைய இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்