இலங்கை

39 நாள்களில் 73,300 பேர் கைது

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், நேற்று (08) வரையிலுமான 39 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது, 73,300 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன, அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 59,009 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 6,797 பேர் ஹெரோய்ன், 4,737 பேர் கஞ்சா, ஐஸ் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த 250 பேரும் அடங்குவர் என்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மேலும் குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிப்பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 148 பேரும் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 16,276 பேரும்  பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், 10,012 பேரும் வேறு குற்றச் செயல்களுக்காக 20,789 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.

அத்துடன், இந்த மாதத்தில், நேற்று (08) வரையான காலப்பகுதிக்குள் 2,101 பேர் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் 1,383 பேர் கஞ்சா, 75 பேர் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.

அத்துடன், சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேரும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 2,497 பேரும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 2,744 சந்தேகநபர்களும் வேறு குற்றங்கள் ​தொடர்பில் 5,451 பேரும்   கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் மேல் மாகாணத்திலேயே அதிகமான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு, அதிகமாக சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றா

Related posts

சீனாவின் தடுப்பு மருந்தால் இலங்கைக்கு பாரிய நட்டம்

shareek1

’1000 ரூபாய் விவகாரத்தில் தலையிடுவேன்’

user2

2 வெளிநாட்டவருக்கு இலங்கையில் ​கொரோனா

shareek1

Leave a Comment