இலங்கை

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை திரட்டுவதே இம்ரான்கானின் விஜயத்தின் நோக்கம் ; மனித உரிமைகளிற்கான தென்னாசிய அமைப்பு

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் இடம்பெறும் காலம் மற்றும் நோக்கம் குறித்து மனிதஉரிமைகளிற்கான தென்னாசிய அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளிற்காக தென்னாசிய அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

பாக்கிஸ்தான் பிரதமரின் இந்த விஜயம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரின் ஆரம்பத்துடன் இடம்பெறவுள்ளது, இந்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்று குறித்து ஆராயப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிமுறைகளை மீறி தகனம் செய்வதற்காக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டப்படும் தருணமிது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனத்தின் நாடுகள் வாக்களிப்பதற்கான ஆதரவை பெறுவதே பாக்கிஸ்தான் பிரதமரின் விஜயத்தின் நோக்கம் என நாங்கள் கருதுகின்றோம். 

மேலும் பிரதமர் இம்ரான்கான் தனது விஜயத்தின் போது முஸ்லீம்களின் மனித உரிமைகள் மீது குறித்த கரிசனைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் அவர் அரசஅதிகாரிகள் மற்றும் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.

இலங்கை முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தயாராகயிருப்பதற்காக பாக்கிஸ்தான் பிரதமரை பாராட்டும் அதேவேளை இது இலங்கையின் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம்.

2020 ம் ஆண்டு இலங்கை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும்நிலைமாற்றுக்கால நீதிநடைமுறைக்கு வேண்டுகோள் விடுக்கும் -தான் இணை அனுசரணை வழங்கிய ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக்கிக்கொள்வதாகவும் -உள்நாட்டில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் நடைமுறைகளை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தது.

பாக்கிஸ்தானும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவர்களிற்கு அவசியமாக உள்ள நிலைமாற்றுக்கால நீதி நடைமுறையை தவிர்ப்பதற்கு உதவும் – பாதிக்கபட்டவர்கள் நாட்டின் தமிழ் முஸ்லீம் சிறுபான்மை மக்கள்.

இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் சிறந்த தருணம் பிரதமர் இம்ரான்கானின் விஜயம்.

அதேவேளை இலங்கை பாக்கிஸ்தான் தென்னாசியாவிற்கு பொதுவான மனித உரிமை கரிசனைகள் சிந்திப்பதும் முக்கியமானது.

மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான பல கட்டுப்பாடுகள் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் பிராந்தியத்திற்கு பொதுவான அம்சங்களாக காணப்படுகின்றன.

தேசியவாதமும் தீவிரவாதமும் அதிகரித்துள்ளதால் சிறுபான்மையினத்தவர்கள் ஒதுக்கப்படுதல் குடிமைதளத்தின் அளவு குறைவடைதல்,பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தினால் அரசசாரத நபர்களினால் இலக்குவைக்கப்படுதல் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்கட்சியினர் உரிய நடைமுறையினை பின்பற்றாமல் தடுத்துவைக்கப்படுதல் இழிவுபடுத்தப்படுதல் சட்டஙகளை தவறாக பயன்படுத்துவதாலும் நிறைவேற்று அதிகாரத்தின் தவறான செல்வாக்கினாலும் துன்புறுத்தப்படுதல் ஆகிய தென்னாசியா முழுவதும் பரவலாக காணப்படுகின்றது.

தென்னாசியாவில் மனித உரிமை நிலவரம் மோசமடைவதற்கான சமீபத்தைய உதாரணம் இந்தியாவின் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் டிசா ரவியின் கைது.

கொரோனா தொற்றுநோயை காரணம் காட்டி மக்களின் உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் அப்பட்டமாக மீறப்பட்ட சம்பவங்கள் பல உள்ளன.

இலங்கையிலும் பாக்கிஸ்தானிலும் இராணுவமயப்படுத்தல் குறிப்பாக கொவிட் 19 தொடர்பான திட்டங்களிற்கு இராணுவம் தலைமைதாங்குதல் பொதுமக்களின் வாழ்க்கையின் ஏனைய விடயங்களிலும் இராணுவம் தலைமைதாங்குதல் தென்னாசிய மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தினை சிவில் உரிமைகளை மேலும் குறைத்துள்ளது.

பாக்கிஸ்தானில் சிறுபான்மையினத்தவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் துன்பங்களும் மிகமோசமான மதநிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதும் சிறுபான்மை சமூகத்தினர் சில சந்தர்ப்பங்களில் அயல்நாடுகளில் அடைக்கலம் கோரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினைகளிற்கு உரிய தீர்வை காண முயலாமல் மாணவர்கள் இயக்கத்தையும் பஸ்துன் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் இலங்கையில் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களின் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு பிரதமர் இம்ரான்கானிற்கு உள்ள சட்டபூர்வதன்மை குறித்து கேள்வியை எழுப்புகின்றது.

இவ்வாறான இருதரப்பு சந்தர்ப்பங்கள் ஏனையவர்களின் கரிசனைகளை புறந்தள்ளிவிட்டு ஒரு சமூகம் மாத்திரம் கவனம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என நாங்கள் கருதுகின்றோம்.

மனித உரிமைகளிற்காக தென்னாசிய அமைப்பு

Related posts

கடலில் 2,000 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்

user2

657 பேர் குணமடைந்தனர்

user2

வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு

farookshareek

Leave a Comment